Thursday, October 8, 2026

சசி வீரவங்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு


முறையற்ற கடவுச்சீட்டை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக சஷி வீரவங்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) நிராகரித்துள்ளது

இந்தத் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, மேன்முறையீடு செய்த பெண் பிரதிவாதிக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார். 

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக தூதரக கடவுச்சீட்டைப் பெற்ற குற்றத்திற்காக, சசி வீரவன்சவுக்கு 27 மே 2022 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 100,000 அபராதமும் விதித்தது. தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி அவர் மேன்முறையீடு செய்தார். அதன்படி, 31 மே 2022 அன்று, கொழும்பு பிரதான நீதிபதி நந்தன அமரசிங்க, ரூ. 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்டார்.

இன்று, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சசி வீரவன்ச தாக்கல் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை மீண்டும் நிலைநிறுத்தப்படும்.

you may also like