- by Editor
- 7 months ago
ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தேவை; பைடனின் கருத்து குறித்து வெள்ளை மாளிகை விளக்கம்
-
- by Editor,
- 2 years ago
- in உலக செய்திகள்
இஸ்ரேல் - ஹமாஸ் இரு தரப்புகளுக்கும் இடையில் இடம்பெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், பைடனின் கருத்து குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது. ஹமாஸின் முக்கிய தலைவர்களை குறி வைத்து அழிக்கிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் இராணுவம் கண்மூடித்தனமாக காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைகூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காசா பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாக்க வேண்டும் என ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மினியாபோலிஸ் நகரில் சுமார் 200 பேர் அடங்கிய பொது மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, பெண் ஒருவர் குறுக்கிட்டு, போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனால் நெருக்கடிக்கு உள்ளான ஜோ பைடன், 'ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் இடைநிறுத்தம் தேவை. பணயக் கைதிகளை மீட்பதற்கு தோதாக கால அவகாசம் தேவை எனத் தெரிவித்துள்ளார். பைடனின் இந்த கருத்து வைரலான நிலையில் அது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 'வெளிநாட்டினர் வெளியேறும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவி கிடைக்கும் வகையிலும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனிதாபிமான இடைநிறுத்தம் தேவை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் விளக்கியுள்ளனர்.