- by Editor
- 1 month ago
நடிகர் விஜய் மீது பாதணி வீச்சு: பொலிஸில் முறைப்பாடு பதிவு
-
- by Editor,
- 2 years ago
- in சினிமா செய்திகள்
நடிகர் விஜய் மீது பாதணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோயம்பேடு பொலிஸ் நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் தி.நகர் க.அப்புனு நேற்று அளித்த புகார் மனுவில்,
"மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த கடந்த 28 ஆம் திகதி இரவு நடிகர் விஜய் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்துக்கு வருகை தந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விஜய்யை நோக்கி பாதணியை வீசியுள்ளார்.
இந்த செயலில் ஈடுபட்ட, அந்த நபரைக் கண்டுபிடித்து அவர் மீதுசட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.