Friday, October 9, 2026

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது


பங்களாதேஷின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்தை நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு போராட்டக்காரர்கள் காலக்கெடு விதித்த சில மணிநேரத்தில் நாடாளுமன்றம் இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள் இயக்கத்தின் தலைவர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி மொஹமட் சஹாபுதீன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுக்கும் வகையில் தீர்மானமொன்றை எடுத்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக பங்களாதேஷின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவம் தலைமையிலான அரசை ஏற்க மாட்டோம் என்று மாணவர் போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

 மேலும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (வயது 84) இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என்று போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய, ஆலோசகராக இருக்க முஹமது யூனுஸ் ஒப்புக்கொண்டுள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.  

you may also like