- by Editor
- 1 year ago
ஹட்டன் வலயப் பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறப்பு
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (06) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அனைத்து பாடசாலைகளிலும் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைபோல் முன்னெடுக்கப்படும் என ஹட்டன் வலயக் கல்வி காரியாலயம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடந்த இரண்டு நாட்களாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.