Thursday, October 8, 2026

ஹட்டன் தனுஜா சிவரூபனின் புதிய படைப்பு பாடல் வெளியீடு


ஹட்டனை சேர்ந்த பாடலாசிரியை தனுஜா சிவரூபனின் புதிய படைப்பு “முதல் காதலே” எனும் பாடல் காதலர் தினத்தன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.

பிரணவ அறக்கட்டளை நிறுவனர் சித்ரவேல் ரமேஷ்பாபு தலைமை ஹட்டன் சாய் சத்யா ஹாலிடே ஹோமில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் சரஷ்டீன், பாடலின் இயக்குனர் பவரோஷன் மற்றும் அவரது குழுவினர் உட்பட ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், கலையுலக நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முதல் காதலின் இனிய நினைவுகளையும், மனதைத் தொட்ட உணர்வுகளையும் வெளிப்படுத்தும் மென்மையான மெலடி பாடலாக இது அமைந்துள்ளது.

T&D Tunes மற்றும் KingCrown Production இணைந்து தயாரித்த இந்த பாடல் தற்போது T&D Tunes YouTube சேனலில் பிரபல இந்திய கவிஞர், எழுத்தாளர் மனுஷபுத்திரனால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

you may also like