- by Editor
- 4 months ago
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியை நிறுத்த ஜனாதிபதி தீர்மானம்!
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகளின் 51 சதவீதத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகளை விற்பனை செய்ய அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய, தனியார் முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனைக் கைவிட்டு ஸ்ரீ லங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தை செயற்திறன் மிக்கதாக மாற்றுவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.