Saturday, October 10, 2026

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு


நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் கோரியுள்ளது.

இதேவேளை, பசறை – கொடமுதுன வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போது குறித்த வீதியை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

you may also like