Saturday, October 10, 2026

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் - இலங்கை சுகாதார அமைச்சர் சந்திப்பு!


பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் - இலங்கை சுகாதார அமைச்சர் சந்திப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஜீஸ் மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கும் இடையே சுகாதார அமைச்சில் ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இரு நாடுகளின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கிய ஊடக நிகழ்ச்சிகளின் பரிமாற்றம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை பரிமாறிக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால சமூக, பொருளாதார, கல்வி, விளையாட்டு மற்றும் அரசியல் உறவுகள் மற்றும் சுகாதாரம், சுதேச மருத்துவம், சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா துறைகள் தொடர்பான நடவடிக்கைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து இக் சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேற்கூறிய அனைத்து துறைகளிலும் பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு உறுதியான ஆதரவையும்,பங்களிப்பினையும் வழங்கும் என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

you may also like