- by Editor
- 2 years ago
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
ஓமானில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் பத்து லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன .
கைது செய்யப்பட்டவர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் என்பதுடன் இவர் ஓமானில் கடை ஒன்றை நடத்தி வருகின்றார் என தெரியவந்துள்ளது .
மேற்படி நபர் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் .