Wednesday, October 7, 2026

வீண் விவாதம், பழைய விமர்சனங்களால்சட்டப்பேரவையில் நேரம் விரயமாகிறது: குற்றச்சாட்டுகிறது கொமதேக


சட்டப்பேரவையில் அதிகமான நேரம் வீண் விவாதங்களுக்கும், பழைய விமர்சனங்களுக்கும் செலவழிக்கப்படுகிறது என கொமதேக பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இ.ஆர்.ஈஸ்வரன் வேதனை தெரிவித்தார்.

கரூரில் மணவாடியில் தனியார் நிறுவன திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏயுமான இ.ஆர்.ஈஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

கரூரைப் பொறுத்தவரை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை எதிர்பார்க்கும் பகுதி, மின்வெட்டு காரணமாக தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

தமிழகத்தில் உள்ள அறிவிக்கப்படாத மின் வெட்டை தமிழக அரசு உடனடியாக தீர்க்க முன் வரவேண்டும். மாற்றத்திற்காக மக்கள் அளித்த வாக்கு. 6 மாத காலம் அவகாசம் கேட்டனர். 4 மாதங்கள் ஆகிவிட்டன. பல்வேறு நிர்வாக குளறுபடி நடந்து கொண்டிருக்கிறது. அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும்.

பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு மீண்டும் திரும்பப் பெறப்படுகிறது. மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது. தற்போது புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதாக அறிவித்துள்ளனர். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அறிவிப்பை திரும்பப் பெறுவதை தவிர வேறு வழியில்லை.

முடிவு எடுப்பதற்கு முன்பு தீர்க்கமாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட வேண்டும். தனிமனித விமர்சனம், கொச்சைப்படுத்தி பேசுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் நிலைப்பாடு.- என்றார்.


you may also like