Thursday, October 8, 2026

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ அதிரடி அப்டேட்


நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று(09) மாலை 4.00 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய அந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அதே கூட்டணி தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், யோகி பாபு, மோக்ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை ரம்யா கிருஷ்ணன் ‘ராஜ ராஜேஸ்வரி’ என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான படத்தின் டீசர், 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசரில் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி தம்பதியரின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவர்களது 6 வயது மகளை மையமாகக் கொண்ட கதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நகைச்சுவை, குடும்பம் மற்றும் சமூக கருத்துகளை இணைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் செல்லா அய்யாவு தெரிவித்துள்ளார்.

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 3ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதன் முதல் பாடல் நாளை மாலை ரசிகர்களுக்காக வெளியிடப்படவுள்ளது.

you may also like