- by Editor
- 2 years ago
விம்பிள்டனில் டென்னிஸ் ஆட்டத்தை ரசித்த : கோஹ்லி - அனுஷ்கா!
விம்பிள்டனில் டென்னிஸ் ஆட்டத்தை ரசித்த : கோஹ்லி - அனுஷ்கா!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா நேரில் கண்டுகளித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வளையத்தளங்களில் வைரலாகியுள்ளன.
லண்டனில் நடைபெற்றுவரும் டென்னிஸ் விளையாட்டின் முக்கிய தொடராக பார்க்கப்படும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் 1-6, 6-4, 6-4, 6-4 என, அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோஹ்லியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் ஜோகோவிச் ஆட்டத்தை பார்வையாளர் பகுதியில் இருந்து நேரில் கண்டுகளித்தனர்.
அதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோஹ்லிக்கு, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
c