Tuesday, October 6, 2026

விஜய் பதவியேற்பு விழாவில் கார்கே, ராகுல் காந்தி பங்கேற்பு


விஜய் முதல்வராக பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பார் என ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

இன்று விழா நடத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

you may also like