- by Editor
- 9 months ago
வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு!
-
- by Editor,
- 6 months ago
- in இலங்கை செய்திகள்
கம்பஹா, கட்டான - மஹா ஹூணுபிட்டிய பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில், வாளால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் மஹா ஹூணுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், அது மோதலாக மாறியுள்ளது. இதன்போது சந்தேகநபரால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார் என்று ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவரைத் தேடிப் பிடிப்பதற்கான விசேட விசாரணைகளைக் கட்டான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.