Friday, October 9, 2026

வாகன விபத்தில் 2 பெண்கள் பலி!


காலி,நெலுவ – பெலவத்தை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நெலுவையில் இருந்து பெலவத்தை நோக்கிச் சென்ற லொறியும், பெலவத்தையில் இருந்து நெலுவ நோக்கிச் சென்ற ஓட்டோவும்

ஹத்தே கணுவ பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெலுவ களுபோவிட்டியாவ பகுதியில் வசிக்கும் 55 மற்றும் 27 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

you may also like