Friday, October 9, 2026

இன்று மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே! - வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு


"மூவின மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளால் அவர் வெற்றி பெற்றே தீருவார். அவரின் வெற்றி வரலாற்று வெற்றியாக - வரலாற்றுச் சாதனையாகப் பதிவு செய்யப்படும்."

- இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். வடக்கு விஜயத்தின்போதும் இதனை நாம் நேரில் அவதானித்தோம். மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வருவதையே வடக்கு மக்கள் விரும்புகின்றனர். அவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களின் ஏகோபித்த தீர்மானமும் அதுவே. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளால் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றே தீருவார். இந்த வெற்றி வரலாற்று வெற்றியாக - வராலாற்றுச் சாதனையாகப் பதிவு செய்யப்படும்.

நாட்டை அழித்தவர்களை விரட்டிய மக்கள்இ இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் அணிதிரண்டுள்ளனர். நாட்டை மீட்ட தலைவர் மட்டுமல்ல உலகின் சிறந்த தலைவரும் ரணில் விக்கிரமசிங்கவே." - என்றார்.

you may also like