- by Editor
- 5 months ago
வளி மாசடைவால் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை!
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
வளி மாசடைவு காரணமாக இந்தியாவின் - டில்லியில் உள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அங்குள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் இரண்டு வாரங்களில் டில்லியில் வளி மாசடைவு மேலும் தீவிரமடையும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விஷ தன்மையுடன் கூடிய பொருட்களை எரிப்பதன் காரணமாக வளி மாசடைவு விகிதம் அதிகரித்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், டில்லியில் வளி மாசுப்பாடு அதிகரித்து வருவதனால் அங்கு சுவாச நோய்க்கு உள்ளாகுபவர்களின் விகிதமும் அதிகரித்து வருகிறது என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.