- by Editor
- 2 years ago
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
-
- by Editor,
- 4 months ago
- in இலங்கை செய்திகள்
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பதிவாகக்கூடும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.