- by Editor
- 1 month ago
வளர்ப்பு நாயிற்கும் தனது சொத்தில் பங்கு: ரத்தன் டாடாவின் உயில்
-
- by Editor,
- 1 year ago
- in இந்திய செய்திகள்
பிரபல இந்தியத் தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9ஆம் திகதி காலமானார்.
அரச மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது மறைவை அடுத்து டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ரத்தன் டாடா தனது சொத்தில் யார் யாருக்கு எவ்வளவு சேர வேண்டும் என்று எழுதிவைத்துள்ள உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி ரத்தன் டாடாவுக்கு தனிப்பட்ட சொத்து சுமார் 10,000 கோடி ரூபா (இந்திய ரூபாவில்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜுகுதாரா வீதியில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோரப் பங்களா, 350 கோடி வங்கி வைப்புகள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீதப் பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்களாக உள்ளன.
உயிலில் தனது ஜெர்மன் ஷெப்பர்டு வகை 'டிட்டோ' என்ற வளர்ப்பு நாய்க்குத் தனது சொத்தில் ஒரு பங்கை எழுதி வைத்துள்ளார்.
மேலும் டிட்டோவை தனது சமையல்காரர் ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் என்றும் உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
டிட்டோவை பார்த்துக்கொள்ள ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.
இதைத் தவிர, சமையல்காரர் ராஜன் ஷா, வீட்டுப் பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் சொத்தில் பங்கு என்று உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் தன்னுடைய நண்பரான இளைஞர் சாந்தனு நாயுடுவுக்கு சொத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை ரத்தன் டாடா எழுதி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது.
அக்கடனையும் ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார்.
மேலும் அவரது அறக்கட்டளை, சகோதரர், சகோதரிகள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பிறருக்கும் தனது சொத்தில் பங்களித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 வீத பங்கையும் ரத்தன் டாடா அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.