- by Editor
- 2 years ago
வரவிருக்கும் வரவு - செலவுத் திட்டத்தில் சில வரிகளைக் குறைக்க திட்டம்
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகச் சில வரிகளிலிருந்து விலக்களிக்கவும் (வரி நீக்கம்), உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் நிதி ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அக்குரஸ்ஸயில் இன்று (20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சில வரிகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை அரசு உணர்ந்துள்ளது. அதனால் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்ட சில வரிகளை முற்றாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தித் திறைசேரியை நிரப்பியுள்ளோம். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக 1,750 பில்லியனும், நேரடி மூலதனச் செலவினங்களுக்காக 250 பில்லியனும் சேர்த்து மொத்தமாக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. வீதிகள், பாலங்கள், மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகளவிலான மூலதனச் செலவினம் செய்யப்படும் ஆண்டாக அடுத்த ஆண்டு அமையும்.
டிசம்பரில் 6,000 ரூபா கொடுப்பனவு: அஸ்வெசும திட்டம் மூலம் பயன்பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கும், 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
பெற்றோரையும் பாதுகாப்பாளர்களையும் இழந்த சிறுவர் இல்லச் சிறுவர்கள் ஒவ்வொருவருக்கும் வரும் ஜனவரி முதல் வங்கிச் சேமிப்புக் கணக்கில் மாதம் 5,000 ரூபா வீதம் வைப்பு செய்யப்படும். அவர்களுக்கு 18 வயதாகி வெளியேறினாலும், 21 வயது வரை இந்த நிதி தொடர்ந்து வழங்கப்படும். அவர்கள் 21 வயதை எட்டி சமூகத்திற்குள் நுழையும் போது, வீடமைத்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ள 10 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்.
மக்கள் எப்போதும் நிவாரணங்களிலேயே தங்கியிருப்பது நல்லதல்ல என்றாலும், வருமான வழியற்றவர்கள், உடலளவில் இயலாதவர்கள் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நலிவுற்ற பிரிவினரைப் பாதுகாப்பதே ஒரு சிறந்த நாட்டின் கடமையாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.