- by Editor
- 2 years ago
லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ டிரெய்லர் வெளியானது
-
- by Editor,
- 2 months ago
- in சினிமா செய்திகள்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் லோகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘டிசி’. இப்படத்தில் லோகேஷுடன் இணைந்து வாமிகா கபி மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் இசை ஆல்பம் வெளியான நிலையில், திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘டிசி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில், காவல்துறையினரின் தவறுகளை மையமாகக் கொண்டு கதை நகர்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“தப்பு செய்தால் போலீஸ் தண்டிக்கும்; ஆனால் போலீஸே தப்பு செய்தால்?” என்ற வசனம், காவல்துறை தொடர்பான சர்ச்சைக்குரிய சம்பவங்களை பின்னணியாகக் கொண்ட கதையாக இப்படம் உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.
மேலும், அதிரடி காட்சிகள், வன்முறை பின்னணி மற்றும் காதல் கலந்த திரைக்கதையுடன் ‘டிசி’ திரைப்படம் உருவாகியுள்ளதாக டிரெய்லர் மூலம் தெரியவந்துள்ளது.