Friday, October 9, 2026

ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரி பிரமோத்ய விக்கிரமசிங்க வழக்கு


இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்கிரமசிங்க, தம்மை நியாயமற்ற முறையிலும் முறைசாரா விதத்திலும் பதவியிலிருந்து நீக்கியமைக்காக இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் கிரிக்கெட் மாற்றக் குழுவிற்கு எதிராகக் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இத்தாக்குதலின் மூலம் ரூ. 75 மில்லியன் நட்டஈடு கோரப்பட்டுள்ளது.

முன்கூட்டிய பதவி நீக்கம்: 2025 டிசம்பர் 17ஆம் திகதி இரண்டு வருட காலப்பகுதிக்காக நியமிக்கப்பட்ட தமக்கு, எவ்வித முன்அறிவிப்போ, போதிய நியாயப்படுத்துதலோ அல்லது முறையான வழிமுறையோ இன்றி முன்கூட்டியே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கிரிக்கெட்டிற்காகத் தனது பிற வணிக மற்றும் தொழில்சார் வாய்ப்புகளை ஒத்திவைத்து அர்ப்பணித்த நிலையில், இந்த தன்னிச்சையான நீக்கத்தால் தமக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம் அமையாமல் போனதுடன், நிதி ரீதியாகவும் தனது தொழில்சார் கௌரவத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அவர் அனுப்பிய நிபந்தனைக் கடிதத்திற்கு (Letter of Demand) சாதகமான பதில் கிடைக்காத நிலையிலேயே இந்த சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்

you may also like