- by Editor
- 1 month ago
அரசியலமைப்புக்கு முரணான செயல் -சுரேஷ் சலேவுக்காக குரல் கொடுக்கும் ஐதேக
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணானவை எனக் கூறி, ஐக்கிய தேசியக் கட்சி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், சுரேஷ் சலே நடத்தப்படும் விதம் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை அனுப்புவது பொருத்தமானதாக இருக்கும் என ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் காணப்படும் ஆபத்தான சூழலைத் தமது கட்சி தீவிரமாக அவதானித்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவுக்கு எதிராக தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகள் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், எதிர்காலத்தில் இதேபோன்ற நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கும் அமுல்படுத்தப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முழுமையாக இணங்க இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து தாம் தொடர்ந்து தீவிரமாக அவதானித்து வருவதாகவும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகக் கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தனது அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது.