- by Editor
- 6 months ago
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்: நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுது.
ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 200 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 51 ஆயிரத்து 756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 5.25 கோடி பேர் தகுதி பெற்ற வாக்காளர்கள். இதில் 2.73 கோடி பேர் ஆண்கள், 2.52 கோடி பேர் பெண்கள். மொத்தம் 1,862 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 61 ஆயிரத்து 021 பேர் ஏற்கெனவே வீட்டில் இருந்தபடி வாக்களித்து விட்டனர். வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க, மாநிலம் முழுவதும் தேர்தல்ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்திருந்தது.
ராஜஸ்தானில் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பா.ஜ.க. மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இந்த முறை ஆட்சியை தக்கவைப்போம் என காங்கிரஸ் நம்புகிறது. அடுத்த ஆட்சியை அமைக்க பா.ஜ.க. தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், பா.ஜ.க. மாநில தலைவர் சி.பி. ஜோஷி உள்ளிட்டோர் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தானில் வலிமையான அரசை பா.ஜ.க. அமைக்கும். பெண்கள் அதிக அளவில் இம்முறை வாக்களிப்பார்கள். ஜனநாயகத்தின் வலிமையை நாம் பார்ப்போம் என குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க முன்வர வேண்டும். மிகப் பெரிய சதவீதத்தில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நேற்று பதிவு செய்யப்பட்ட வாக்குகள் டிசெம்பர் .3 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.