Saturday, October 10, 2026

'ராஜபக்ச கும்பலின் குடியுரிமையை பறிக்கக் கோரி கையெழுத்து வேட்டை'


இலங்கையை வங்குரோத்தாக்கிய நபர்களின் குடியுரிமையை இரத்துச் செய்யுமாறு கோரியும், அவர்களுக்கு இனிமேலும் அரச ஆதரவின் கீழ் சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்று வலியுறுத்தியும், நாட்டின் வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட 220 இலட்சம் பேருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் இணைந்து இன்று கொழும்பு - புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகப் பொதுமக்கள் கையெழுத்துத் திரட்டும் பணியை ஆரம்பித்தது.

இதன் பிரகாரம் 'நீதிக்கான மக்கள் ஆணையைக் கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் கையெழுத்துத் திரட்டும் வேலைத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதுடன் மதத் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் திரண்டு தங்களின் கையொப்பங்களைப் பதிவிட்டனர். 

you may also like