Thursday, October 8, 2026

ரஷ்யாவில் 500 வருடங்களின் பின் வெடித்த எரிமலை !!


ரஷ்யாவில் 500 வருடங்களின் பின் வெடித்த எரிமலை !!

ரஷ்யா கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு வெடித்துள்ளது.

- ரஷ்ய அரசு தரப்பு இதுகுறித்து கூறுகையில்,

“இந்த எரிமலையின் சாம்பல் மேகம் சுமார் 6000 மீட்டர் உயரம் வரை உயர்ந்துள்ளது. இச் சாம்பல் மேகம் பசுபிக் கடலை நோக்கி நகர்ந்து செல்வதால் மனிதர்களுக்கு தற்போதைக்கு எவ்வித அபாயமும் இல்லை“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்புக்கு ஓரஞ்ச் அவியேஷன் அலர்ட் அளிக்கப்பட்டுள்ளது.

இவ் எரிமலை வெடிப்பு குறித்து ரஷ்யாவின் செய்தி நிறுவனமொன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாற்றில் பதிவான க்ராஷென்னினிகோவ் எரிமலையின் முதல் வெடிப்பு இதுவாகும். இது 1463 ஆம் ஆண்டுக்கு முன்னர் அல்லது பின்னர் நடந்திருக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

you may also like