- by Editor
- 9 months ago
ரயில் மற்றும் பேருந்து சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு
-
- by Editor,
- 5 months ago
- in இலங்கை செய்திகள்
இன்று (16) முதல் நாடு முழுவதும் 50 முதல் 60 சதவீதம் வரை தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளைய தினத்திற்குள் (17) தனியார் பேருந்து சேவைகள் முழுமையாக வழமை நிலைக்கு கொண்டு வரப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (15) உத்தியோகபூர்வ வேலைநாளாக இருந்தபோதிலும், பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், பல பேருந்துகள் பயணிகள் இன்றி இயக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இன்று முதல் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று சுமார் 120 ரயில் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய, இன்று காலை மற்றும் மாலை அலுவலக ரயில்கள் வழமைபோல் இயங்குவதுடன், வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும், இன்று காலை 6:10 மணிக்கு மாத்தறை நோக்கி விசேட ரயில் ஒன்று இயக்கப்பட்டதுடன், பிற்பகல் 1:00 மணிக்கும் மேலும் ஒரு விசேட ரயில் இயக்கப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் 19ஆம் திகதி மாத்தறையிலிருந்து பல விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.