- by Editor
- 2 years ago
யூடியூப்பின் அதிரடி அப்டேட் - இனி பணம் கட்ட வேண்டாம்
-
- by Editor,
- 5 months ago
- in உலக செய்திகள்
ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக மாறியுள்ள யூடியூப், இசை, வீடியோக்கள் என உலகளவில் மிகப் பிரபலமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இதனால் பலரின் டிவி பார்வை பழக்கமும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், யூடியூப் தொடர்ந்து புதிய அப்டேட்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது முக்கியமான மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி, Picture-in-Picture (PiP) வசதி இனி ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
எனினும், இந்த வசதி இசை வீடியோக்களை தவிர்ந்த நீண்ட வீடியோக்களுக்கு மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இந்த PiP வசதி யூடியூப் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.