- by Editor
- 7 months ago
புலனாய்வுத் தகவல்கள் கசிந்தால் ஆபத்து - சலேவுக்கு ஆதரவாக கம்மன்பில வாதம்
-
- by Editor,
- 3 months ago
- in இலங்கை செய்திகள்
ன் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொற்களை வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிப்பதாக தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, அதற்கு எதிராக சலேவின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்யக்கூடும் எனக் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தமக்கு எதிராக நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு ஒரு சந்தேகநபரை வற்புறுத்த நீதிமன்றத்திற்குக்கூட அதிகாரம் இல்லை என்பது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டக் கோட்பாடு என தெரிவித்தார்.
சுரேஷ் சலே தனது மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பதற்கு நான்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, சந்தேகநபர் ஒருவர் தமக்கு எதிரான விசாரணைக்கு உதவ வேண்டிய சட்டப்பூர்வ கடப்பாடு இல்லாததே முதல் காரணம் என அவர் குறிப்பிட்டார். மேலும், கடவுச்சொற்களை வழங்குமாறு அழுத்தம் கொடுப்பது அல்லது பலவந்தப்படுத்துவது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், சுரேஷ் சலேவின் சாதனங்களில் புலனாய்வுத் தகவல் வழங்குநர்களின் அடையாளம் உள்ளிட்ட மிகவும் உணர்திறன்மிக்க தகவல்கள் இருப்பதால், அவை வெளிப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் புலனாய்வுத் தகவல்கள் இரகசியப் பொலிஸாரின் கைகளுக்குச் சென்றதால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவுபடுத்திய கம்மன்பில, குறிப்பாக 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற "மிலேனியம் சிட்டி" சம்பவத்தை உதாரணமாகக் குறிப்பிட்டு, அதன்பின்னர் நாட்டின் புலனாய்வுக் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, நீதிமன்ற உத்தரவை மதித்தாலும் அதனுடன் உடன்பட முடியாது என்றும், அந்த உத்தரவுக்கு எதிராக சுரேஷ் சலேவின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் எதிர்பார்ப்பதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.