- by Editor
- 2 years ago
யாழ். மாவட்டத்தில் தெரிவத்தாட்சி அலுவலராக பதில் அரச அதிபர் பணியாற்றுவதை ஏற்கவே முடியாது - சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலராகப் பதில் அரச அதிபர் பணியாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்இ தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இலங்கையில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகள் உள்ளபோதும் ஒரு நிரந்தர அரச அதிபர் நியமிக்கப்படாது அரசியல் செல்வாக்கின் மூலம் நிர்வாக சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிகாரி பதில் அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது அரசியல் நியமனம் என்பதால் தேர்தலின்போதும் அரசியல் செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்பதோடு மாவட்டத்தில் உள்ள விசேட தர அதிகாரிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதிலும் நெருக்கடி நிலையை உண்டு பண்ணும்.
இவற்றைக் கருத்தில்கொண்டு யாழ். மாவட்டத்துக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலராக நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.