- by Editor
- 2 years ago
தேர்தல் முடிந்தது... பெட்ரோல் விலை ஏறுமா? மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
-
- by Editor,
- 5 months ago
- in இந்திய செய்திகள்
மத்திய கிழக்கில் ஈரான் போர் சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை உயருமோ என்ற அச்சம் பொதுமக்கள் இடையே உருவாகியுள்ளது.
தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இன்று (29) மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனுடன் தேர்தல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து, மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த சூழலில், மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மத்திய அரசு எரிபொருள் விலையை உயர்த்தும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியதால் மக்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் ஏற்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, “எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை. மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
"சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றங்கள் இருந்தாலும் இந்தியாவில் போதிய கையிருப்பு உள்ளது. பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. வீட்டு பயன்பாடு மற்றும் போக்குவரத்துக்கான எரிவாயு விநியோகம் 100% உறுதி செய்யப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு கொள்கலன் விநியோகம் 70% வரை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் விநியோகம் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு தரப்பில் எரிபொருள் விலை உயர்வு குறித்த வதந்திகள் தவறானவை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.."