Saturday, October 10, 2026

யாழ். பல்கலையில் தொழிற் சந்தை நிகழ்வு


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் தொழிற் சந்தை நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்களின் தொழில்வாய்ப்புகளை அதிகரிக்கும் முகமாக யாழ். பல்கலைக்கழகத் தொழிற்றுறைத் தொடர்பு மையம் மற்றும் தொழில் வழிகாட்டல் அலகு ஆகியவை இணைந்து நடத்தும் இந்தத் தொழில் வாய்ப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொழில் வாய்ப்புச் சந்தையில் கணக்கியல், நிதியியல், மனிதவள, சந்தைப்படுத்தல், வணிகத் தொழில்நுட்பம், தொடர்பாடல் மற்றும் ஆடை உற்பத்திகளில் ஈடுபடும் சுமார் 43 தொழில் வழங்குநர்கள் கலந்துகொண்டனர்.

இதன்மூலம் சுமார் 800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தமது தொழில் வாய்ப்புகள் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

you may also like