Thursday, October 8, 2026

யாழில் - 23 மில்லியனுக்கும் அதிகம் மதிப்புடைய கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.


யாழில் - 23 மில்லியனுக்கும் அதிகம் மதிப்புடைய கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.

யாழ் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்று (04) மாலை நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் பெருந்தொகையான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின்படி, ஆழியவளை, கட்டைக்காடு பகுதி முழுவதிலும் நேற்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இச் சோதனை நடவடிக்கையின்போது ஆழியவளை களப்பு பகுதியில் 30 பொதிகள் அடங்கிய 102 கிலோ 350 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை சுமார் 23 மில்லியனுக்கும் அதிகம் மதிப்புடையவை என கடற்படையினர் தெரிவித்துள்ளார். ஆனால், இச் சம்பவத்துடன் தொடர்புடைய யாரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


you may also like