- by Editor
- 1 year ago
யாழில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் நால்வர் சிக்கினர்!
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 108 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
குருநகரைச் சேர்ந்த இருவர் மற்றும் பூநகரி, மன்னாரைச் சேர்ந்த தலா ஒருவர் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்களைக் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.