Wednesday, October 7, 2026

யாழில் டெங்கு ஒழிப்புக் கடமைகளில் இருந்து டெங்குத் தடுப்பு உதவியாளர்கள் திடீர் விலகல்


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்புக் கடமைகளில் இருந்து டெங்குத் தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் அவர்கள் இன்று கையளித்துள்ளனர்.

நிரந்தர நியமனம் மற்றும் நிலுவைக் கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய காலப் பகுதியில் டெங்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

you may also like