- by Editor
- 7 months ago
மொரட்டுவை ராவத்தாவத்தையில் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு
-
- by Editor,
- 1 month ago
- in இலங்கை செய்திகள்
மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி எவ்வித காயங்களும் இன்றி தப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அங்குலானை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் என தகவல் வௌியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸ் நிலையத்தினால் இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.