Friday, October 9, 2026

மொரட்டுவை சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - ஒருவர் பலி


மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் 'C' பகுதியில் இன்று (23) இரவு திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இத்தீ விபத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சிக்கிக்கொண்ட மூவரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஓர் ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மொரட்டுவை தீயணைப்புப் படையினர் 2 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தித் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சமையல் எரிவாயுக் கசிவு (Gas leak) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மொரட்டுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

you may also like