Monday, October 12, 2026

மேலும் ஒரு அ.தி.மு.கவின் எம்.எல்.ஏ. இராஜினாமா; த.வெ.கவில் இணைந்தார் அம்பாசமுத்திரம் சுப்பையா


அ.​தி​.மு.க. எம்.​எல்.ஏ இசக்கி சுப்​பை​யா, தனது பதவியை இராஜி​னாமா செய்​து​விட்டு த.வெ.க​வில் இணைந்​துள்ளார்.

தமிழகத் தேர்​தலில் அ.தி.​மு.க 3 ஆவது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. இதையடுத்து அ.தி​.மு.க பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு எதி​ராக சி.​வி.சண்​முகம், எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில் எம்​.எல்.​ஏக்​கள் சிலர் தனி அணி​யாகச் செயல்​படு​கின்​றனர். இந்த அணி​யில் இருந்த மரகதம் குமர​வேல், சத்​ய​பா​மா, ஜெயக்​கு​மார் ஆகியோர் தங்​களு​டைய எம்.​எல்.ஏ பதவி​களை நேற்று முன்​தினம் இராஜி​னாமா செய்​தனர். பிறகு அவர்​கள் த.வெ.க​வில் இணைந்​தனர்.

அ.தி​.மு.க. எம்​எல்​ஏக்​களின் இராஜி​னாமா கடிதங்​களைப் பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி. பிர​பாகர் ஏற்​றுக் கொண்​டார். அத்​துடன் 3 பேரும் வெற்றி பெற்ற மது​ராந்​தகம், தாராபுரம், பெருந்​துறை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் வெற்றிடமாகின என அறிவிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் சி.​வி.சண்​முகம் அணி​யில் உள்ள அம்​பாச​முத்​திரம் எம்.​எல்.ஏ. இசக்கி சுப்​பையா நேற்று தனது பதவியை இராஜி​னாமா செய்​தார். அதற்​கான கடிதத்தை ஜே.சி.டி. பிர​பாகரிடம் கொடுத்​தார். ஆனால் அந்த கடிதத்தை ஏற்க அவர் மறுத்​தார்.

அப்​போது அவர் கூறுகை​யில், ‘‘இராஜி​னாமா செய்​வ​தாக கைப்பட எழு​திய கடிதத்தை மட்​டுமே ஏற்க முடி​யும். தட்​டச்சுசெய்து அதில் கையெழுத்​திட்டகடிதத்தை ஏற்க முடி​யாது." என்று தெரி​வித்​தார். அதைத் தொடர்ந்​து, கைப்பட இராஜி​னாமாகடிதத்தை எழு​தி, பேர​வைத் தலை​வரிடம் இசக்கி சுப்​பையா வழங்​கி​னார். அதை பேர​வைத் தலை​வர் ஏற்​றுக் கொண்​டார். பின்னர் பனையூரில் உள்ள த.வெ.க. அலு​வல​கத்​தில் அமைச்​சர்​கள் செங்​கோட்​டையன், ஆனந்த் முன்​னிலை​யில் இசக்கி சுப்​பையா த.வெ.க​வில் இணைந்​தார்.

இதுதொடர்பில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய சுப்​பை​யா, ‘‘எதிர்க்​கட்சி எம்.​எல்​.ஏ​வாக பெரிய அளவில் நலத்​திட்​டங்​களைக் கொண்டு வரமுடிய​வில்​லை. இப்​போது என் அம்​பாச​முத்​திரம் தொகு​திக்கு பல நலத்​திட்​டங்​களைக் கொண்டு வர வேண்​டும் என்ற ஒரே நோக்​கத்​தில் த.வெ.க​வில்​ இணைந்​துள்​ளேன்​.” - என்​றார்​.  

you may also like