Friday, October 9, 2026

முழு அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்


விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் இறுதிச் சடங்குகள் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராம்தாஸ் அதாவலே, முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார், பா.ஜ.க. தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஆந்திரப் பிரதேச அமைச்சர் நர லோகேஷ், முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அஜித் பவாரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அஜித் பவாரின் மகன்கள் பார்த் மற்றும் ஜெய் ஆகியோர் தங்கள் தந்தையின் சிதைக்கு தீ மூட்டினர். இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் பொதுமக்களும் பங்கேற்று தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.  

you may also like