- by Editor
- 3 months ago
முதியவர் கொடுப்பனவு நிறுத்தப்படமாட்டாது
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
2024 மே மாதம் கொடுப்பனவுகளை வழங்குவதற்குத் தேவையான சுமார் 1518 மில்லியன் ரூபா நிதி மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப காரணங்களினால் கொடுப்பனவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தாலும், ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தின் பின்னர் பிரதேச செயலகங்களில் வழமையான முறையில் முதியவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் நலன்புரி நன்மைகள் சபை அறிவுறுத்தியுள்ளது.