- by Editor
- 2 years ago
முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது
-
- by Editor,
- 4 months ago
- in இந்திய செய்திகள்
தமிழகத்தில் த.வெ.க. அரசு பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சித் தலைவர் விஜய் கடந்த மே 10 திகதி பதவியேற்றுக் கொண்டார். ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் முதல்வர் விஜய் உட்பட மொத்தம் 35 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் வளர்ச்சிப் பணிகள், நலத் திட்டங்களை கண்காணித்து விரைந்து செயல்படுத்தும் வகையில், மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் 3 ஆம் திகதி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் மக்கள் மத்தியில் இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.