Saturday, October 10, 2026

முதலையால் கவ்விச் செல்லப்பட்ட 11 வயது சிறுவன் சடலமாக மீட்பு!


கடுவலை பகுதியில் களனி ஆற்றில் நேற்றுக் காலை நீராடச் சென்ற நிலையில் முதலையால் கவ்விச் செல்லப்பட்டுக் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

கடுவலை – வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் சுழியோடிகள் இணைந்து சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டபோதே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

you may also like