Saturday, October 10, 2026

'முடிவுக்கு வருகின்றது சுமந்திரனின் அரசியல்'


"இது எம்.ஏ.சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வருகின்ற கால கட்டம். எனவே, அவர் அமைதியான முறையிலே அரசியலை விட்டுப் போவதுதான் பொருத்தம்."

- இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் தனது பெயரைத் தவிர்த்து முடிந்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமது தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளட்டும் என்று சவால் விடுத்துள்ளாரே என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறினார். 

you may also like