- by Editor
- 6 months ago
மீன் வலையில் சிக்கிய T-56 துப்பாக்கி !!
மீன் வலையில் சிக்கிய T-56 துப்பாக்கி !!
மஹியங்கனை , மாபாகட வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் T-56 துப்பாக்கியொன்று இன்று செவ்வாய்க்கிழமை (01) சிக்கியுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்.
மேலும், பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் அறிவுறுத்தலின் படி, மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன வீரசிறியின் வழிகாட்டுதலின் கீழ் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.