- by Editor
- 2 years ago
விஜய் கூட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு
-
- by Editor,
- 1 year ago
- in இலங்கை செய்திகள்
கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இந்நிலையில், கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரூர் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்ல, “நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.