- by Editor
- 7 months ago
மீனவர்கள் கறுப்புக்கொடிப் போராட்டம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் கடற்றொழிலாளர்கள் இன்று காலை சவுக்கடி கடற்பரப்பில் இருந்து இலங்கை எல்லை வரை சென்று கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 படகுகளில் 32 மீனவர்கள் கறுப்புக்கொடிகளைப் படகில் காட்டியவாறு எல்லையை நோக்கிப் பயணமாகி கடலில் சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
"தாண்டாதே தாண்டாதே எல்லையைத் தாண்டாதே, அடிக்காதே அடிக்காதே வயிற்றில் அடிக்காதே, தொப்புள்கொடி உறவுகளாக எம்மைப் பார்க்கத் தெரியவில்லையா?, இழுவை மடி வலைகளை வெட்டி தொழிலின்றி தவிக்கின்றோம்" என்ற பாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி படகுகளை வட்டமிட்ட வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, இலங்கை எல்லைப் பகுதியில் கடற்படையின் ரோந்துப் படகுகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து கரையை நோக்கி வருகை தந்த மீனவர்கள் சவுக்கடி கடற்படை முகாம் முன்பாக அமர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.