Thursday, October 8, 2026

நுவரெலியாவில் தனியார் பேருந்து ஓடையில் கவிழ்ந்து விபத்து


நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில், கிரெகரி ஏரியை ஒட்டியுள்ள தலகல ஓயாவிற்குள் தனியார் பேருந்து ஒன்று இன்று (08) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நுவரெலியாவிலிருந்து சாந்திபுர நோக்கி பயணிக்கத் தயாராக இருந்த குறித்த பேருந்தை நிறுத்த முயன்றபோது, அது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலகல ஓயாவிற்குள் கவிழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற நேரத்தில் பேருந்தில் சாரதியும் நடத்துநரும் மட்டுமே இருந்ததாகவும், அவர்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

you may also like