- by Editor
- 4 months ago
அனுராதபுரத்தை அதிரவைக்க வரும் மஹிந்த - மீண்டும் சூடுபிடிக்கும் அரசியல்
-
- by Editor,
- 4 weeks ago
- in இலங்கை செய்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஜனசதன’ பேரணி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை (12) அனுராதபுர நகரில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.வி. சனகா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் கடந்த காலங்களில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டி, அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதே இந்தப் பேரணியின் பிரதான நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.