Wednesday, October 7, 2026

மீண்டும் ஒரு வைரஸ் பீதி - சொகுசு கப்பலில் உயிரைப் பறிக்கும் ஹான்டா வைரஸ்


சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா உலகம் முழுவதும் ஏற்படுத்திய பெரும் பாதிப்பை அனைவரும் மறக்கவில்லை. அதேபோல், தற்போது மீண்டும் ஒரு ஆபத்தான வைரஸ் பரவல் கவலைக்கிடமான நிலையை உருவாக்கியுள்ளது. ஹான்டா வைரஸ் காரணமாக ஏற்கனவே பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்லாண்டிக் கடலின் அழகை ரசிக்கச் சுற்றுலா சென்ற பயணிகள் எதிர்பாராத அதிர்ச்சியை சந்தித்துள்ளனர். அர்ஜென்டினாவில் இருந்து மார்ச் மாதம் புறப்பட்ட ‘ஹோண்டியஸ்’ (Hondius) என்ற சொகுசு கப்பலில் ஹான்டா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலில் பயணம் செய்தவர்களில் இதுவரை இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐந்து பேருக்கு அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் துரதிர்ஷ்டவசமாக டச்சு தம்பதியினர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 150 பயணிகள் இன்னும் கப்பலில் சிக்கித் தவித்து வருவதால், அவர்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. இதற்கிடையில், கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒரு பிரிட்டிஷ் பயணி மீட்கப்பட்டு தென்னாப்பிரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.


you may also like